வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்பட சில மாநிலங்களுக்கு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன.
தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது.
* சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்
* அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
* தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு
* புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு
* தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை
* நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை விட மிக வேகமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் #கமல்ஹாசன். அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. அதே நேரம், தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்கலையாம்.
https://twitter.com/onlykodanki/status/1338497191208349701?s=20
228 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன