வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற முதல்வருக்கு தர்மபுரி விவசாயிகள் கண்டனம்

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயி என்றால், சேலம் 8 வழிச்சாலை உறுதியாக வராது என்று அவர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை விட வேண்டும் என்று சேலம் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் 16ஆம் தேதி தர்மபுரி எம்.பி., செந்தில்குமாரை சந்தித்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக 8 வழிச்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க கோரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டது.

 

மேலும், 8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறும் முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே இருக்கும் பல சாலைகளை புதுப்பித்து, அகலப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தாலே போதும் என்றும், 8 வழிசாலையால் விவசாயிகளுக்கும்,  பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

234 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன