
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் பட்டய கிளப்பும் அறிவுமணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதற்கு காரணம் பாரதி கண்ணாமாவில் இவருக்கு கிடைத்த பாசிட்டிவ் மற்றும் பொறுமைசாலியான பாத்திரமே முக்கிய காரணம். நாயகனின் தங்கையாக நடித்தவர் அறிவுமணி. கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இந்நிலையில் காவியாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் பேசும்படியான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் கதாபாத்திரத்துக்கு ரீபிளேஸ் அறிவுமணி தானாம். மிகவும் பொறுமையும், அமைதிமாக இருக்கும் அறிவுமணிக்கு முல்லை கேரக்டர் நன்றாக பொருந்தும் என கூறுகின்றனர் ரசிகர்கள். பாண்டியன் ஸ்டோர்ஸின் முதல் நாள் ஷூட்டிங்கிலும் பங்கேற்று இயக்குநரின் பாராட்டை பெற்றுள்ளாராம் காவியா. அறிவுமணி இனி முல்லையாக மலர்வாள்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த நடிகை சித்ரா, கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

