
2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சார்லி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.
திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் தேடிச் செல்லும் காதலும் இசையும் கலந்த அழகான பயணம் தான் இந்தக் கதை.
கொரோனா அச்சுறுத்தலால் ‘மாறா’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் முடிவு செய்த படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ‘மாறா’ வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

