புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திருமணத்துக்குப் பின் கணவருடன் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் வந்த காஜல்… சிறப்பாக வரவேற்ற சிரஞ்சீவி!

திருமணத்துக்குப் பின் கணவருடன் ஷூட்டிங் வந்த காஜல் அகர்வால் - வரவேற்ற சிரஞ்சீவி

அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.


திருமணத்துக்குப் பின் காஜல் - கிச்லு தம்பதி மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

திருமணத்துக்குப் பின் கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வாலுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 
திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். 


இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார் 
காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கிச்லுவும் வந்திருந்தார். 
இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.





308 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன