ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம்  2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று  எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடையும்  என்றும்  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் “மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் விழாவை கொண்டாடுங்கள், மேலும் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.

287 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன