ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் – கொதித்த கமல்

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் – கொதித்த கமல்

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் , மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என மாவட்டவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், “மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான்” என தெரிவித்தார். முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், எம்ஜிஆரிடமிருந்து விருது வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமலின் நெற்றில் எம்ஜிஆர் முத்தமிடும் நெகிழ்ச்சியான காட்சியும் இடம்பெற்றுள்ளது

இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பரப்புரை செய்யும் கமல்ஹாசனால், அதிமுக ஓட்டுக்களை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் ட்விட்டரில் எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “மீனவர்களை காவு வாங்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தின் கட்டுமான தவறுகளை அரசு சரிசெய்துகொள்ள வேண்டும் எனும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால் ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்த கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மைய நிலத்தில் எதிரொலிப்பது இல்லை. எம்.ஜி.ஆரை போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன