ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

தப்ளிக் ஜமாத் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் -சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட தப்ளிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த மேலும் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறி கைது செய்யப்பட வெளிநாட்டவர் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித ஆதாரமின்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியிருந்த கால கட்டத்தில் டெல்லியில் இஸ்லாமிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில், கிருமி பரவலுக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா விதிகளை மீறி கூடியிருந்ததாக 236 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாநாட்டில் இருந்து 2361 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இலங்கை, தாயலாந்து உள்பட நாடுகளை சேர்ந்த தப்ளிக் ஜமாத் அமைப்பினர் 952 பேர் மீது கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என வழக்கு தொடரப்பட்டது.

இதில் சுமார் 900 பேர் நீதிமன்ற அனுமதியுடன் தாயநாடு திரும்பிவிட்டனர். 44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில் அதில் 8 பேரை போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி டெல்லி நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி விடுதலை செய்துவிட்டது.

 

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பெருந்தொற்றுக்கு காரணமானவர்கள் என்று கூறி பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக மும்பை அவுரங்காபாத் நீதிமன்றம் கருத்து கூறியது. இருப்பினும் இந்த வழக்கில் கைது செய்யப்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேர் மீது டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து கடந்த செவ்வாய் கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில் ஒருவர் கூட டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையால் பிடித்து வரப்பட்டவர்கள் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தப்ளிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த வெளிநாட்டினர் மீதான உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய உள்துறை அமைச்சகமும் மத்திய அரசும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மாநாட்டில் பங்கு பெற இந்தியா வந்த 2000 வெளிநாட்டினர் பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது களங்கம் ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் விமர்சித்துள்ளனர்

294 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன