
தலைநகர் புதுடெல்லியின் பல்வேறு பகுதிகளில் இரவு 12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள அல்வார் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் பதற்றமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு சற்று குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் இன்று 23 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

249 Views
