சனிக்கிழமை, மே 2
Shadow

பிஎஸ்எல்வி C-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோளை ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது.
ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
25 மணிநேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் நான்காவது கட்டத்திலிருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.
262 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன