
முதலில் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.
இந்த நிலையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பினார்.
இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
எனக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமை படுத்தி கொண்டேன்.
நான் நன்றாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது அவரது ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டும் என பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

