ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

லோன் ஆப் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

லோன் ஆப் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

லோன் ஆப்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடன் பெறும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கூகுள்‌, பிளே ஸ்டோரில்‌ உள்ள சுமார்‌ 60 ஆன்லைன்‌ கடன்‌ அப்ளிகேஷன்களுமே ரிசர்வ்‌ வங்கியால்‌ NBFC ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த Loan App-களின் செயல்பாடுகள்‌ அங்கீகரிக்கப்படாதவைகள்‌. இந்த அப்ளிகேஷன்கள்‌ உபயோகிப்பவர்களின்‌ கைபேசியின்‌ எல்லா தகவல்களையும்‌ சேகரித்து, உபயோகிப்பவர்களின்‌ (பொதுமக்கள்‌) தனியுரிமையை மீறும்‌ வகையில்‌ அவை பயன்படுத்‌துகின்றன.

கடன்‌ அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை (Loan Apps) பயன்படுத்த வேண்டாம்‌ என்று பொதுமக்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. பொதுமக்கள்‌ தங்களின்‌ தனிப்பட்ட விவரங்கள்‌, ஆதார்‌ அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில்‌ (Loan Apps) கொடுக்க வேண்டாம்‌.

உங்களின்‌ அனைத்து தொலைபேசி தொடர்புகள்‌. புகைப்படங்கள்‌, கேமரா, இருப்பிடங்கள்‌ மற்றும்‌ தொலைபேசி நினைவகம்‌ ஆகியவை இந்த பணக்‌ கடன்‌ வழங்குதர்களால்‌ சமரசம்‌ செய்யப்படும்‌ என்பதால்‌ எச்சரிக்கையாக இருக்கவும்‌. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ அச்சுறுத்தல்‌ மற்றும்‌ துன்புறுத்தல்‌ அழைப்புகள்‌ வந்தால்‌ காவல்துறையில்‌ புகார்‌ கொடுங்கள்‌.

இந்த அப்ளிகேஷன்களில்‌ (Loan Apps) உள்ள தொடர்பு விவரங்கள்‌, குறை தீர்க்கும்‌ அதிகாரியின்‌ பெயர்கள்‌ மோசடியானவை. ஒரு NBFC இன்‌ உண்மையான தன்மை குறித்து ரிசர்வ்‌ வங்கி மின்‌ வலைத்தளத்தில்‌ சரிபார்க்கவும்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன