ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” மீண்டும் யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளது. இந்த படம் புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகமோ என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

332 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன