ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

 

உலக நாடுகளை மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. ஒவ்வொரு நாடுகளிலம் மக்கள் கொரோனாவால் பாதிப்பட்டு பல இன்னல்களை சந்தித்தனர். மக்களை பாதிக்கமால் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம், வர்த்தகம் கடும் பாதிப்படைந்தன.

கடும் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டி வந்ததால் கொரோனா வீரியம் குறைய ஆரம்பித்தது. 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் புதிய வகை கொரோனா இங்கிலாந்து நாட்டில் பரவியது.

புதிய வகை கொரோனா தொற்று இங்கிலாந்து பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா தொற்று தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்க இங்கிலாந்தை தனிமைப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் இங்கிலாந்து நாட்டுனான விமான சேவை உலக நாடுகள் ரத்து செய்து வருகிறது. கனடா, டென்மார்க், இந்தியா உட்பட 48 நாடுகள் அந்நாட்டுடன் விமான சேவைக்கு தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தை தனிமைப்படுத்து சுற்றியுள்ள எல்லை நாடுகள்ன சவுதி அரேபியா, ஸ்பெயின், இஸ்ரேல், ஓமன், குவைத் போன்ற நாடுகள் எல்லைகளை முழுவதுமாக மூடியுள்ளன. புதிய கொரோனா தொற்று முன்படை விட அதிக வீரியம் கொண்டது என ஆய்வில் கூறப்படுகிறது.

237 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன