செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22
Shadow

மிரட்டலாக வெளியான சிம்புவின் ‘பத்து தல’ டைட்டில் லுக்!

 

சிம்பு இந்த 2020ஆம் ஆண்டில் அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். தனது உடல் எடையை அதிரடியாக குறைத்தது ஈஸ்வரன் பட சூட்டிங்கை முடித்தது மாநாடு அப்டேட் என தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து  இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆரம்பமான திரைப்படம்தான் கன்னட ரீமேக் படமான மப்டி. சில நாட்கள் மட்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற பிறகு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இத்திரைப்படம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில்  பாதையில் விடுபட்டுப் போன  மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கின் படத்தலைப்பினை  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  அறிவித்துள்ளார். பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் இன்று வெளியிட்டனர்.

பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஜனவரியில் பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன