திங்கட்கிழமை, மே 4
Shadow

திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

 

 

திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

நாமக்கல்  பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வரபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா, இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் நடைபெற்றது.

இந்த திருவேலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னதிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும். இன்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார்.

இதையொட்டி,  இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இந்த சனிப் பெயர்ச்சி பூஜை, ஆராதனைகளை ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்.

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன