வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?

 

தமிழ் சினிமாவில் காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது.

வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே உள்ளது. இப்படி வரலாற்று படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இயக்குனர் சுசி கணேசன் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க முடிவு செய்தார்.

இதில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதாநாயகியை இயக்குனர் சுசி கணேசன் தேடி வந்த நிலையில் நடிகை நயன்தாராவை வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியில் ஆட்சி புரிந்தவர், வீரமங்கை ராணி வேலுநாச்சியார். அவர் 1780 முதல் 1789 ஆம் ஆண்டு வரை அங்கு ஆட்சி செய்தவர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் தலைவியான இவர், இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவரின் தைரியத்தையும், துணிச்சலையும் ஈடு கட்டும் வகையில் நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுபோன்ற எந்த படத்திலும் தான் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் இது ஒரு பொய்யான செய்தி என்றும் நடிகை நயன்தாரா அதில் குறிப்பிட்டுள்ளார்.

449 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன