வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

2020-ம் ஆண்டு, தான் கடந்து வந்த பாதை மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அமலா பால்.

அமலா பால் இந்த ஆண்டு சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனது கற்றல்களை ‘2020 – அந்த ஆண்டு’ என்ற தலைப்பில் பகிர்ந்துக் கொண்டார். இந்த ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான், என்று அமலா குறிப்பிட்டுள்ளார்.

“சரியில்லை என்பது சரியில்லை என்று நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்வது சரியில்லை. சரி? குணப்படுத்துதல் ஏற்றுக்கொள்வதில் தான் தொடங்குகிறது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார் அமலா.

வாழ்க்கை தனது பாதையில் வீசிய அனைத்தையும் ஏற்க கற்றுக்கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “வாழ்க்கை என் பாதையில் வீசிய எல்லாவற்றையும் கருணையுடனும் நன்றியுடனும் நான் ஏற்றுக்கொண்டேன். நான் தெய்வீகத்துடன் மீண்டும் இணைந்தேன்.

என் ஈகோவின் மரணத்தில் எழுந்தேன், எனக்குள் இருந்த குண்டலினியை தூண்டினேன். எனது உயிரியல் கடிகாரத்தை மீட்டமைக்க ஆயுர்வேதத்தில் மீண்டும் விழுந்தேன்” என தனது 2020-ம் ஆண்டு குறித்து குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.

446 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன