வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

 

குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’.

கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் – விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை ஜனவரி 1-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்து பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது நேரடியாக பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

650 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன