
லீக்கான வலிமை பட புகைப்படம்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
358 Views
