வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் மீண்டும் சென்னையில் தொடங்க முடிவு

ரஜினிக்காக அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க முடிவு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் அங்கு சென்றார். அவரைத் தொடர்ந்து நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் அங்கு சென்றனர்

கொரோனா பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால், அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு உயர் ரத்த அழுத்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு சில நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், சென்னை திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ரஜினியை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று ரஜினிக்கு மருத்துவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, சென்னையில், படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

330 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன