சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் – காவல்துறை தடை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாளை 2021 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்த வரையில் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பகுதிகளில் ஆண்டுதோறும் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆனால், இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தளர்வுகள் என சமீபத்தில் தான் மக்கள் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பக்கம் எல்லாம் நேர விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களை போலீஸார் அனுமதி அளித்தனர். ஆனால், புத்தாண்டு தினத்தின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்பதால் மக்களுக்கு பீச் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது

318 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன