
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!
தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். மேலும் இவர் கமல் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் படமான விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
நடிகை பூஜா குமார் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பூஜாகுமார் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விஷால் கோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் பூஜா குமார் மற்றும் விஷால் கோஷி தம்பதியருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விஷால் கோஷி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும், குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு தந்ததற்கும் பூஜாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

