ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர். இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவனின் இந்த ட்விட்டை பகிர்ந்த நடிகர் தனுஷ், “ இந்த படம் செல்வராகவனின் கனவு, இதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இளவசரன் மீண்டும் 2024இல் வருவான்” எனத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர் டிசைன் ஹாலிவுட் படத்தின் போஸ்டர் காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கழுவி ஊற்றி விட்டனர்.

ஒரு டிசைன் கூட சொந்த கற்பனையாக உருவாக்காமல் இப்படி அப்பட்ட காப்பி அடித்தால் எப்படி செல்வா என கமெண்ட் போட்டு ரசிகர்கள் காய்ச்சி எடுக்கிறார்கள்

524 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன