திங்கட்கிழமை, மே 4
Shadow

விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

 

மத்திய அரசு உடனான விவசாயிகளின் 7-ம் கட்ட
பேச்சுவார்த்தை தோல்வி

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வரும்

நிலையில் போராட்ட களத்தில் இதுவரை 53 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்,

வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில்,

போராட்ட களத்தில் உயிரிழந்த 53 விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மவுன அஞ்சலியை தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு இடைவேளைக்கு பிறகு,

அமைச்சர்களுடன் பேசாமல் விவசாயிகள் மவுனம் காத்தனர்.
அப்போது, தனி அறையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதனால் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இறுதியில், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

8-வது கட்ட பேச்சுவார்த்தையை வரும் 8-ம் தேதி நடத்த முடிவுசெய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,

மூன்று சட்டங்களில் உள்ள ஒவ்வொரு பிரிவு குறித்தும் பேச்சு நடத்த தாங்கள் விரும்பிய நிலையில்,

சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் விடாப்பிடியாக இருந்ததாக தெரிவித்தார்.
விவசாயிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால்,

எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாது என்று அவர் கூறினார்.

245 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன