செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது!

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில்  2ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அருளானந்தம், பைக் பாபு, கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனால் பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு மீண்டும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

304 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன