
2021 சட்டமன்ற தேர்தல்… அதிமுகவில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு
2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கெல்லாம் மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கலாம்,
யாரையெல்லாம் விலக்கி வைக்கலாம் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிமுக வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது உறுதி என சொல்லப்படுகிறது.
டெல்டாவை பொறுத்தவரை ஓ.எஸ்.மணியன் முதல்வருக்கு அபிமானமுள்ள நபராக இருக்கிறார். அதே போல் அதிமுக மீது எந்த குற்றச்சாட்டு வைத்தாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அமைச்சராவது உறுதி என்றே சொல்லப்படுகிறது
ஏனென்றால் எல்லா தரப்பினருக்கும் அவர் முதல்வர் இடத்தில் இருந்து கொண்டு பதில் சொல்லி வருகிறார். அதே போல் சமூக ரீதியாக பலம் வாய்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
பேசும் போது உளறிக் கொட்டும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஓரங்கட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலிலதா இருக்கும் வரை பின்னணி குறித்து பார்க்காமல் சீட் தருவார். இது ஒரு புறம் இருக்க வாரிசுகளுக்கு சீட் கேட்டு சில அமைச்சர்கள் காய் நகர்த்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் தற்போது திண்டுக்கல் சீனிவாசன், பாஸ்கரன், வெள்ளமண்டி நடராஜன் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு நிச்சயம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்
