
மாஸ்டர் 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.
மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது.
அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில் இவ்வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக மாஸ்டர் இருக்க வேண்டி ரசிகர்கள் முடிவெடித்துள்ளனர்.

இந்நிலையி தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதுபோல ஒருபுகைப்படமும் மற்றொரு புகைப்படத்தில் நிறைய புத்தகங்களுடன் ஒரு பூனைக்குட்டி பக்கத்தில் அமர்ந்து கேம் விளையாடுவதுபோலவும் உள்ளது.
இந்நிலையில் தற்போது, மாஸ்டர் படத்தின் 3 வது புரோமோ வை வெளியிட்டுள்ளது படக்குழு.
இதில் கல்லூரியில் பேராசிரியரான விஜய் கெத்தாக நடந்துவருவதுபோன்ற காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

