வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும்.

அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

266 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன