செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க வலியுறுத்தி திரைத்துறையினர் முன்னெடுக்கும் மிஸ்டுகால் இயக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எழுவரின் விடுதலை கேள்விக்குறியாக உள்ளது. பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்த திரையுலகினர், தற்போது மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராம், தியாகராஜ குமாரராஜா, ராஜு முருகன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் கலையரசன், நடிகைகள் ரோகிணி, ரித்விகா உள்ளிட்டோர் மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். பொதுமக்களும் 90995-26633 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளனர். அண்மையில் திரையுலகினர் பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி Release perarivalan என்ற ஹேஸ்டேகில் டிவிட் செய்தது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது கவனிக்கத்தக்கது.

191 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன