வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!




மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர்.





இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. அதனால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் படத்தின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது

ஏற்கனவே 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், மாஸ்டர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள ரோகிணி திரையரங்கில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொறுமையிழந்த ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்காக கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் பெற்று சென்றுள்ளனர். டிக்கெட் விற்பனையோடு ரசிகர்களுக்கு தளபதி விஜய்யின் புகைப்படம் அடங்கிய முகக்கவசம் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, மாஸ்டர் படம் ஹிட் கொடுக்க வேண்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், ரத்னகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட பலர் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதோடு, பூஜையும் செய்துள்ளனர்

295 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன