செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ல் வெளியான படம் இரும்புத்திரை.

சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் அதே பெயரில் விஷால் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது இரும்புத்திரை.

இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடிக்கு ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மித்ரன் இயக்கி வரும் இந்த படம் ஒரு அதிரடி கணிணி குற்றங்களை வெளிச்சம் போடும் கதை என கூறப்பட்டாலும் இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா காமெடியாக நடித்திருக்கிறாராம்.

கொட்டும் மழையிலும் இரும்புத்திரை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இரும்புத்திரை 2018 பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

 

 

375 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன