
கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ளேன் – நடிகர் கமல்
சென்னை, கேளம்பாக்கத்தில் பிறந்த நாள் மற்றும் நற்பணி மன்றத்தில், 38 வது ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
மக்களுக்கு உதவும் வள்ளல் தேசத்தை உருவாக்கும் நாடு இது. இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை .
கையேந்துபவன் நான்; தமிழ்நாட்டுக்காக ஏந்துகிறேன். தமிழக நலனுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை .
பணக்காரர்கள் வரியை சரியாக செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும்.

ஏதோ ஆர்வத்திற்காக பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை.
சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறை திரும்பி செய்கிறோம்.
இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை பணக்காரர்கள் பற்றி தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? உறவுகள் செத்த பிறகு தான் புத்தி வருமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும் .
அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகிவிட்டது.
எத்தனை பேர் மிரட்டுகிறார்கள், எண்ணிக்கை முக்கியமில்லை என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியம் .

நான் அடி வாங்கிக் கொள்கிறேன். அடிக்கடி தட்டுவதற்கு நான் மிருதங்கம் அல்ல.
கோவில்களை இடிக்க வேண்டும் என நான் சொன்னதில்லை. அவை நமது கட்டடம்நான் உ.பி.,யில் இருக்கும் இந்துவை விட இங்கிருக்கும் என் குடும்பத்தில் இருக்கும் இந்துக்களை கண்டு பயமாக இருக்கிறது.
அதனால் மதத்தின் பெயரால் மருந்து என சொல்லிக் கொண்டு விஷம் தருவதை அருந்தாதீர்கள்.
நான் ஜெயிலுக்கு போவதில் எந்த அவமானமும் இல்லை, நான் திருடிவிட்டா செல்லப் போகிறேன்.
அதனால் தயாராகவே இருக்கிறேன். திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரிய மனிதர்களைப் போல் நடந்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை .
நான் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாக தான் செய்ய முடியும் .
கட்சி துவங்குவதற்கான முதல் பணி தான் மொபைல் ஆப் அறிமுகம்.

நவம்பர் 7 ம் தேதி மொபைல் போன் செயலியின் பெயரும், செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும்.
கட்சி துவங்க பணம் தேவை என சொல்கின்றனர். ரசிகர்கள் நினைத்தால் அதனை தந்துவிடுவார்கள். அரசியல் கட்சி துவங்க பணம் குறித்த பயம் எனக்கு இல்லை என்றார் நடிகர் கமல்

