வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள் – கர்நாடகா அதிர்ச்சி வீடியோ!

தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள் – கர்நாடகா அதிர்ச்சி வீடியோ

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறித்து பல வதந்திகள் எழுந்திருப்பதால், முன்களப் பணியாளர்கள் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராத சூழலே தற்போது நிலவுகிறது. அதனால், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் நடித்த வீடியோ வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில், அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருக்கையில் அமருகிறார். அங்கு இருக்கும் செவிலியர், ஊசியை உள்ளே செலுத்தாமல் அவர் அருகில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். பின்னர் ஊசியை போட்டுக் கொண்டது போல ஒரு நடிப்பு நடித்து விட்டு, எதிரே இருந்த ஊடகங்களுக்கு ஒரு தம்ஸ் அப் போட்டுவிட்டு அந்த அதிகாரி அங்கிருந்து செல்கிறார். அடுத்து வரும் சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே அதிகாரி எஸ்கேப் ஆன இந்த வீடியோ, தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

256 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன