
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை – திருமாவளவன்
தனிச்சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் நிர்பந்திப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டிடுகிறேன் என்று முதலில் மதிமுக வைகோ ஆரம்பித்தார். அடுத்து விசிக திருமாவளவன் சொன்னார். அப்புறம் ஐஜேகே என்று தொடர்ந்தது. இதை உணர்ந்த ஸ்டாலினும், தனிச்சின்னத்தில் போட்டியிட நான் நிர்ப்பந்திக்கவில்லை. அது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்று சொன்னார்
அதாவது, மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் அதை வழங்கிவிடுவது நல்லது என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறேன் என்று செய்தி வருவதால் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் தெரிவித்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் இன்று , தேர்தலுக்கு 15 நாட்கள் முன்னர் தனிச்சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும்,ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனித்தன்மையை இழக்காது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
