ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை!




இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, 
மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது”  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுகுறித்த அவரது அறிக்கையில் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த,  
கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த  மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி 
விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 
தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் –  மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது  
கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று
 இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன