வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4
Shadow

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் – கே.எஸ்.அழகிரி

 

தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை என்றும்

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது. அவர் திமுக கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்றுக்கொள்வோம். நாங்கள் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியினர் இல்லை. கூட்டணியிலிருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உள்ளது. கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டுவங்கி பாதிக்கப்படாது” எனக் கூறினார்.

 

320 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன