வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!



சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி

சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் போனில் 
தன்னிடம் நேற்று விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் 
நேற்று போனில் என்னிடம் விசாரித்தார். 
ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் 
புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ 
பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.

ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, 
அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.


255 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன