புதன்கிழமை, மே 20
Shadow

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே, பிரசாரத்தை தொடங்கியுள்ள ஒவ்வொரு கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.
இன்று காலை அதிமுக, விருப்ப மனு கொடுக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் அளிக்கலாம் எனத் தெரிவித்தது. அதன்பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனத் தெரிவிதிருந்தார்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘‘திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வி்ண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரமாகும். பெண்கள் மற்றும் தலித் தொகுதிகளுக்கு இந்தத் தொகை 15 ஆயிரம் ரூபாய் ஆகும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், விண்ணப்பத் தொகை திருப்பி வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
302 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன