புதன்கிழமை, மே 20
Shadow

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை!

ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ராகுல் காந்தி கடந்த மாதம் 23, 24 மற்றும் 25-ந்தேதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் மார்ச் 1-ந்தேதி ஆகிய மூன்று நாட்களில் தென்தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
277 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன