
தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அவருடன் நடிகை சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

309 Views
