
ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நண்பரும் நடிகருமான ரஜனிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் இல்லை என கூறப்பட்ட நிலையில் ரஜினியை திடீரென கமல் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை கமல் எந்த கூட்டணியிலும் இணையவில்லை. ரஜினியை சந்தித்து தனது கட்சிக்கு வாய்ஸ் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது.
