செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

சென்னைக்கு பெரிய அளவில் தொற்று நோய் ஆபத்து: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

 

 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர். கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதேநிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறை தண்ணீர் வடிந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். புறநகர் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  சென்னையில் மீண்டும் இதேபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிலை இன்னும் நீடிப்பதை அவமானமாகவே கருத வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

939 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன