புதன்கிழமை, மே 15
Shadow

மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்!

மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ரித்தேஷ் தேஷ்முக் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பிரீத்தி ஜிந்தாவின் கைகளில் ரித்தேஷ் முத்தமிட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டிருப்பார்.
இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஒரு வீடியோவை ஜெனிலியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவரை போட்டு உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

177 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன