அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார்.
காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வருகிறார்.
வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார்.
ராகுல் பிரசார கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.
சென்னை பிரசாரத்தை முடித்து கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்தி விட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

