புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன