திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

Tag: ramcharan

பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் - ராம்சரண் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங், பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. முதலில் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ...
‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இந்தியன் 2’பிரச்சனை எதிரொலி....ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை! கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது. ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்குவத...
ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது....