ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

ரவி தேஜா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் தெலுங்கு படம்!

ரவி தேஜா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் தெலுங்கு படம்!

தமிழில் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து சிவாவுக்கு ஜோடியாக ‘தமிழ்படம் 2’ படத்தில் நடித்த இவர், கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு தற்போது தெலுங்கு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை நகினா திரிநாதராவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் தவிர்த்து, ஸ்ரீலீலா என்பவரும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க உள்ளதாம்

339 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன