திங்கட்கிழமை, செப்டம்பர் 7
Shadow

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்ற ரஜினி !

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்ற ரஜினி !

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
இதையடுத்து மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார்
இந்நிலையில், அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஐதராபாத் சென்றுள்ளார்
296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன