
புனேவில் போலி ரெம்டெசிவிர் 4 பேர் கைது
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
அதேபோல், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டிற்கான உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரெம்டெசிவிர் சட்டவிரோதமாக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுகிறது
இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பாரமதி பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் என்று பெயரிடப்பட்ட மூன்று ஊசி குப்பிகள் அதில் இருந்ததாகவும், ஆனால் உண்மையில் திரவ வடிவத்தில் பராசிட்டமால் தவிர வேறு எதுவும் அதில் நிரப்பப்படவில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி மருந்தை ஒரு குப்பிக்கு, ரூ.35,000 க்கு விற்பனை செய்தனர். அதே நேரத்தில் அதன் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ரூ. 1,100 ஆகும். “ஐபிசி, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், மருந்து மற்றும் அழகுசாதன சட்டம் மற்றும் மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) சட்டம் ஆகியவற்றின் கீழ் நான்கு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று பாரமதி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயண் ஷிர்காவ்கர் தெரிவித்தார்
280 Views
